மிருகங்களுக்கு எதற்கு ஆன்மீகம்

Advertisements
தண்ணீரில் மிதப்பதற்குப் பெயர் நீச்சல்.
நீச்சலை பயிற்சியில், முயற்சியில் கற்றபின் தண்ணீரில் மிதக்கலாம், போகலாம்.
இப்படி தண்ணீரில் நீந்த பயிற்சி எடுக்காதவர்கள் தண்ணீரில் விழுந்தால் மரணம் நிச்சயம்.
ஆனால்…
நீச்சல் என்பது ஒவ்வொரு உயிருக்கும் பிறவி இயல்புதான். எல்லா விலங்குகளும், பூச்சி இனங்களும் தண்ணீரில் விழுந்தவுடன் எதேச்சையாகவும், மறுகரை செல்லவும் மிக சாதாரணமாக நீந்தி செயல்படுவதை நாம் அன்றாடம் பார்க்கிறோம்.
ஆனால் அதே சமயம் மனிதன் மட்டும் நீந்த பயிற்சி எடுத்த பிறகே நீச்சலின் லாவகத்தை கற்றுக் கொள்கிறான். அதே சமயம் தலைகூட நிற்காத குழந்தையை தண்ணீரில் போட்டால் அது மூழ்காமல் நீந்துகிறது.
ஆக
வளர்ந்த மனிதன் மூழ்க காரணம் அவனது அறிவின் துணையால் தண்ணீரை எடை போடுவதுதான் காரணம்.
“ஐய்யய்யோ விழுந்துட்டோமே, இப்போ என்ன செய்ய?” என தண்ணீரில் விழுந்தவுடன் குழம்புவதுதான் அறிவின் துணை நாடப்பட்டதற்கான அடையாளம்.
ஒரு எலியோ, ஒரு நாயோ தண்ணீரில் விழுந்தவுடன் அதை பிரச்சனை என நினைக்காமல் உடலும் கால்களும் செயல்படுவதை ஒன்றும் செய்வதில்லை. அதுவாக நீந்துகிறது.
எனவே இங்கே தெளிவாக தெரியும் ஒரு விஷயம் என்னவெனில்….
மனிதன் எதை செய்தாலும் இயல்பாக செய்வதில்லை. தன்னுடைய PA ஆன அறிவு சொல்வதையே கேட்டு செய்கிறான். அறிவின் அறிவித்தலை எந்த கேள்வியும் கேட்காமல் அங்கீகரித்தலே அவன் தனது இயல்பை மறந்து போனதற்குக் காரணம் ஆகும்.
இங்கே மற்றும் ஒரு strong ஆன சந்தேகம் ஒன்று நமக்கு உதிக்கின்றது.
முக்தி அல்லது அனுபூதி என்பது நமது இயல்பு என்பது அதை அடைந்த பின் தெள்ளென தெரிய வருகிறது.
நீச்சலைப் போலவே முக்தியும் அறிவால் மறைக்கப் பட்டிருந்ததும் புரிய வருகிறது.
எனவே…
இந்த நீச்சலைப் போல் மிருகங்களும் இயல்பான முக்தி நிலையை அது ஒரு முக்தி நிலை என்பதை பற்றி அக்கறை கொள்ளாமலேயே அதை சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனவோ என்கிற சந்தேகம் இந்த நீச்சல் உதாரணத்தை வைத்து நமக்கு ஏற்படவே செய்கின்றது.
தொலைத்த எதையும் தேடி கண்டு பிடித்தவுடன் நமக்கு வரும் ஆனந்தம் அலாதிதான்.
அதே போல இந்த இயல்பான நீச்சல் உத்தியை நாமே தொலைத்து விட்டு அப்புறம் பயிற்சி என்ற தேடலில் அதை மீண்டும் அடைந்து விட்டு,
“எனக்குத்தான் நீச்சல் தெரியுமே” என குதித்து ஆனந்தப் படுகிறோமா?
மிருகங்களோ தொலைக்கவே இல்லை. அவைகளுக்கு எதுக்கு இந்த ஆன்மிகம்?!
பார்த்தீபன்

You may also like...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com